பகவத் கீதை வெண்பா

எந்த விபூதிகளா லிவ்வுலகெங் கும்பரந்தே
பந்தமுற நிற்கின்ற பண்பினை நீ – யந்தவகை
திவ்வியமா கச்சர் விபூதிகளைத் தீர்ந்தனைத்துஞ்
செவ்வியுட னேயெனக்குச் செப்பு.    10.17

எந்த விபூதிகளால்

எந்த நியமன விஶேங்களால்

இவ்வுலகெங்கும் பரந்தே

இவ்வுலகெங்கும் வியாபித்து

பந்தம் உற நிற்கின்ற பண்பினை நீ

இவ்வுலகோடு உனக்குள்ள உறவு தோற்றும்படி நிற்கும் தன்மையுடையவனாய் நீ விளங்குகிறாயோ

அந்த வகை

அத்தகைய பெருமையை உடையவையாய்

திவ்வியமாகச் சேர் விபூதிகளை அனைத்தும்

அற்புதமாயிருக்கும் நியமனவிஶேங்களனைத்தையும்

தீர்ந்து செவ்வியுடனே எனக்குச் செப்பு

உறுதியுடன் நன்றாக எனக்குச் சொல்லுவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top