பகவத் கீதை வெண்பா

எவ்வாறு யோகியெனக் குன்னை நினைந்துநினைந்
தவ்வாறு நானறிவ னாதியா – யிவ்வாறா
மெவ்வெவையர் நற்பொருளி லெக்குணமு மிக்கவுனைச்
செவ்வழியாற் சிந்திப்பன் சேர்ந்து.   10.18

ஆதியாய்

ஆதிப்பிரானே!

யோகி எனக்கு

பக்தி யோகத்தை அநுஷ்டிக்கும் எனக்கு (விளங்கும்படியாக)

உன்னை நினைந்து நினைந்து

உன்னை எப்போதும் சிந்திக்க முற்பட்டவனாய்

அவ்வாறு உன்னை எவ்வாறு நான் அறிவன்

அத்தகைய பெருமையுடைய உன்னை எப்படி நான் அறிவேன்?

இவ்வாறாம் எவ்வெவையாம் நற்பொருளில்

முன் சொன்ன சில பொருள்களைப் போன்ற எந்த எந்த உண்மையான பொருள்களில்

எக்குணமும் மிக்க உனை

எல்லாக் கல்யாணகுணங்களும் நிறைந்த உன்னை

செவ்வழியால் சேர்ந்து சிந்திப்பன்

பக்தியோகமாகிற நல்ல வழியால் பொருந்திச் சிந்திப்பேன்?

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top