பகவத் கீதை வெண்பா உன்னுடைய யோகத் தியல்வும் விபூதியதும் பன்னிவிரித் தீசா பகரினன்(ம்) – நின்னியலுஞ்சீரமுத வெள்ளஞ் செவியாற் பருகுமெனக் காரவிர கில்லை யமைந்து. 10.19 ஈசா எம்பெருமானே! உன்னுடைய யோகத்து இயல்வும் உன்னுடைய கல்யாண குணச்சர்த்தியின் பெருமையையும், விபூதி அதும் முற்கூறப்பட்ட நியமனத்தையும், பன்னி விரித்து இன்னம் பகர் மிக விரிவாக மறுபடியும் சொல்லுவாய் நின் இயலும் சீர் அமுதவெள்ளம் உன்னுடைய குணப் பெருமைகளாகிற அமுதவெள்ளத்தை, செவியால் பருகும் எனக்கு காதால் பருகுகின்ற எனக்கு, அமைந்து ஆர விரகில்லை திருப்தியுடன் இருக்க வழியில்லை. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0