பகவத் கீதை வெண்பா

இன்னே விசய னியம்ப விறையுரைத்தான்
மன்னே யுனக்கு மகிழ்ந்துரைக்கே – னென்னேர்
பரப்பிற்கோ ரெல்லையிலை பாரவி பூதி
நிரப்பிற் றரத்தவைகே ணீ.           10.20

இன்னே விசயன் இயம்ப

இவ்வாறாக அர்ஜுனன கூற

இறை

கண்ணன்

உரைத்தான்

சொன்னான்

மன்னே

குருகுலத்தரசனே!

உனக்கு மகிழ்ந்து உரைக்கேன்

உனக்கு மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.

பார விபூதி நிரப்பில் தரத்தவை

சிறந்த செல்வங்களில் மிகச்சிறப்புற்ற பெருமையையுடைய சிலவற்றை,

நீ கேள்

நீ கேட்பாயாக.

என் நேர் பரப்பிற்கு

எனக்குப் பொருந்தியுள்ள செல்வங்களுக்கு

ஓர் எல்லை இலை

ஓர் எல்லை கிடையாது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top