பகவத் கீதை வெண்பா எப்பொருட்கு முள்ளே யிருக்கின்ற வின்னுயிர்நா னப்பொருளுக் காதிநடு வந்தமுநா – னிப்படியி லெல்லாமு நானா யியன்ற பரிசிதனைச் சொல்லாரக் கேளாய் தொகுத்து. 10.21 எப்பொருட்கும் எல்லா ஜீவராஶிகளுக்கும் உள்ளே ஹ்ருதயத்தில் இருக்கின்ற வாழ்கின்ற இன்னுயிர் இனிய ஆத்மாவாயிருப்பவன் நான் நானே அப்பொருளுக்கு அந்த ஜீவராஶிகளுக்கு ஆதி முதலில் நடைபெறும் படைப்புக்குக் காரணமாய் நடு இடையில் நடைபெறும் ரக்ஷணத்துக்கும் காரணமாய் அந்தமும் கடைசியில் நடைபெறும் ஸம்ஹாரத்துக்கும் காரணமாயிருப்பவன் நான் நானே இப்படியில் இவ்வுலகில் எல்லாமும் நானாய இயன்ற பரிசு இதனை எல்லாப் பொருள்களும் நானாக இருக்கும் இப்பெருமையை தொகுத்து சொல் (நான்) தொகுத்துச் சொல்லுவதை ஆரக்கேளாய் (நீ) முழுவதும் கேட்பாயாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0