பகவத் கீதை வெண்பா ஆதித்தர் தம்மி லதிகனாம் விட்டுநான் சோதிப் பகலிரவிச் சோதிநான்-மீது மருத்துவரின் மன்னு மரீசிநா னானேன் திருத்துமதி தாரகையிற் சேர்ந்து. 10.22 ஆதித்தர் தம்மில் பன்னிரு ஆதித்யர்களுக்குள் அதிகனாம் சிறந்தவனான விட்டு விஷ்ணு எனும் பெயருடைய ஆதித்யன் நான் நானே சோதி சோதிகளுக்குள் பகல் பகலில் ஒளிவீசும், இரவி சோதி ஸூர்யனாகிற சோதி, நான் நானே, மருத்துவரின் மருத்துக்களில் மீது மன்னு மிகச் சிறந்த மருத்தான மரீசி நான் ஆனேன்– மரீசி எனும் மருத்து நானாயிருக்கிறேன் தாரகையில் நக்ஷத்திரங்களோடு சேர்ந்து தலைவனாகச் சேர்ந்து, திருத்து மதி சிறந்துள்ள சந்திரன் நான் ஆனேன் நானேயாயிருக்கிறேன் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0