பகவத் கீதை வெண்பா

வேதங்க ளிற்சாம வேதநான் விண்ணவரில்
நாதன் சதக்கிருது நானாவன்-போதஞ்சேர்
நெஞ்சாவ னெப்பொறிக்கு நின்றியலும் பூதங்கட்
கெஞ்சா வறிவாவன் யான்.         10.23

வேதங்களில்

நான்கு வேதங்களில்

சாமவேதம் நான்

(உயர்ந்ததான) சாமவேதம் நானே

விண்ணவரில்

தேவர்களுள்

நாதன் சதக்கிருது

தலைவனாகையாலே உயர்ந்த இந்திரன்

நான் ஆவன்

நான் ஆகிறேன்

எப்பொறிக்கும்

எல்லா இந்திரியங்களுக்குள்ளும்

போதம் சேர் நெஞ்சு ஆவன்

ஜ்ஞானம் வெளிப்படும் வழியாகையாலே சிறந்ததான மனமாக ஆகிறேன்

நின்று இயலும் பூதங்கட்கு

(இவ்வுலகில்) நின்று நடையாடும் ஜீவராஶிகளுக்கு

எஞ்சா அறிவு ஆவன் யான்

அழியாத அறிவாக ஆகின்றவனும் நானே

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top