பகவத் கீதை வெண்பா சாமங் களிற்பெரிய சாமநான் சந்தத்திற் சேமஞ்செய் காயத் திரிதானா – னாமஞ்சேர் மாதத்து மார்கழிநான் வாய்ந்திருது வானவற்றுண் மீதத் தினிவசந்தன் மிக்கு. 10.36 சாமங்களில் ஸாமங்களில், பெரிய சாமம் நான் ப்ருஹத்ஸாமம் நானே, சந்தத்தில் சந்தஸ்ஸுக்களில், சேமம் செய் காயத்திரிதான் நான் நன்மை செய்யும் காயத்ரீ சந்தஸ் நானே, மாதத்து மாதங்களில், நாமம் சேர் மார்கழி நான் புகழ்பெற்ற மார்கழி நானே, இனி வாய்ந்த இருதுவானவற்றுள் வாய்ப்புடைய ருதுக்களுக்குள், மிக்கு மீது(அத்து) வசந்தன் மிகவும் சிறந்த வஸந்த ருதுவும் நானே. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0