பகவத் கீதை வெண்பா

ஏற்குமென் றிவ்வியவி பூதிகளுக் கெல்லைதான்
பார்க்குமள வில்லை பரந்தபனே – சீரக்கவன்
வுத்தேசத் துன்னி யுரைத்தேன் விபூதியிது
மெய்த்தேசுற் றேய்ந்த விரிவு.         10.41

பரந்தபனே

எதிரிகளை வருத்துகின்றவனே!

பார்க்கு மளவு

ஆலோசித்துப் பார்த்தால்,

ஏற்கும் என் திவ்விய விபூதிகளுக்கு

எனக்குத் தக்கதான எனது மங்களமான செல்வங்களுக்கு

எல்லை தான் இல்லை

எல்லை அடியோடு இல்லை

விபூதி இது

இந்தச் செல்வங்களின்

மெய்த்தேசு உற்று ஏய்ந்த விரிவு

உண்மையான பெருமை பொருந்திய விஸ்தரத்தை

சீர்க்கவன் உத்தேசத்து உன்னி உரைத்தேன்

பெருமை மிக்கவைகளை ஆராய்ந்து வகைப்படுத்தி ஓரளவுக்குச் சுருக்கமாக உரைத்தேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top