பகவத் கீதை வெண்பா

ஏது விபூதியுடைத் தேது திருவுடைய
தேது மிகவுயர்த்தி யேதுபொரு – ளேததுதான்
என்னுடைய தேசதனி லேகதே சத்துளதா
வுன்னுடைய நெஞ்சா லுணர்.         10.42

ஏது ஏது பொருள் விபூதி உடைத்து

எந்தெந்த ஜீவராசி தன்னால் நியமிக்கப்படும் செல்வங்களை உடையதாய் விளங்குகின்றதோ

ஏது ஏது திருவுடையது

எந்தெந்த ஜீவராசி ஒளியுடையதோ

ஏது ஏது மிக உயர்த்தி

எந்தெந்த ஜீவராசி மங்களமான கார்யங்களைத் தொடங்குவதில் ஊற்றமுடையதாய் விளங்குகின்றதோ

அதுதான்

அந்த ஜீவராசி

என்னுடைய

(அளவற்ற சக்தியுடைய) என்னுடைய

தேசு அதனில் ஏகதேசத்து உளதா

ஶக்தியில் ஒருபகுதியிலிருந்து உண்டானதாக

உன்னுடைய நெஞ்சால் உணர்

உன்னுடைய நெஞ்சால் நினைப்பாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top