பகவத் கீதை வெண்பா

இந்தப் பலவா வியம்பியமெய்ஞ் ஞானத்தா
லெந்தப் பயனா மிகல்விசயா – முந்தையெனம்
சத்திலே சத்தாய்ச் சகத்தனைத்தும் பற்றிநா
னத்திலே நிற்ப னமர்ந்து.         10.43

இகல் விசயா

போரில் வெற்றியே காணும் அர்ஜுனா!

இந்த பலவா இயம்பிய மெய் ஞானத்தால்

இப்படிப் பலவாறாக என்னால் சொல்லப்பட்ட உண்மையறிவாலே

எந்த பயன் ஆம்

என்ன பயன் உண்டாகும்?

முந்தை

அனாதிகாலமாக

என் அம்சத்திலே

எனது சக்தியின் சிறுபகுதியாலே

சகத்து அனைத்தும் பற்றி

உலகனைத்தையும் தரித்து நின்று

நான்

நான்

அத்திலே

அவ்வுலகனைத்திலும்

சத்தாய் அமர்ந்து நிற்பன

விகாரமற்றவனாகப் பொருந்தி நிற்கிறேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top