பகவத் கீதை வெண்பா பகவத் கீதை வெண்பா (பத்தாமத்தியாயத்தின் ஸாரத்தைக் கூறும் பாசுரம்) முத்தியருண் மாயன் முழுதருளுஞ் சீர்க்கீதை பத்தி வளர்த்துயர் பத்தாமோத் – தொத்திசையி வெப்பொருளுந் தானா யிசைந்த படிவிரித்த திப்பொருளாய்ந் தேமுடிந்த திங்கு. 10.43A முத்தி அருள் மாயன் மோக்ஷத்தை அருளுகின்ற மாயப்பிரானான கண்ணன் முழுது அருளும் சீர்க்கீதை முழுமையாக அருளிச்செய்த சிறப்புடைய கீதையின் பத்தி வளர்த்து உயர் பத்தாம் ஓத்து அது பக்தியோகத்தின் வளர்ச்சியைக் காட்டுகையாலே உயர்வுபெற்ற பத்தாமத்தியாயம் எப்பொருளும் தானாய் இசைந்தபடி விரித்து எல்லாப் பொருள்களும் (தன் செல்வமாகையாலே) தான் என்று சொல்லும்படி பொருந்திநிற்கின்றமையை விளக்கி, இப்பொருள் ஆய்ந்தே இவ்வர்த்தத்தை ஆராய்ந்து முடிவுகட்டி இசையில் ஒத்து (மற்ற அத்யாயங்களுடன்) இசையிலும் புகழிலும் ஒத்ததாய இங்கு முடிந்தது இப்போது நிறைவுபெற்றது வாதிகேஸரிஜீயர் அருளிய பகவத்கீதை வெண்பாவில் பத்தாமத்தியாயம் நிறைவுபெற்றது. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0