பகவத் கீதை வெண்பா

என்னிலைய சிந்தையா ரென்பா லுயிரினார்
தன்னிலையிற் றம்மிற்றஞ் சார்வுணர்த்திப் – பின்னிய லாற்
சொல்லியெனை யென்றுஞ் சுகிப்பர் மிகவுகப்பர்
எல்லிபக லொன்றின்றி யேய்ந்து.        10.9

என்னிலைய சிந்தையார்

என்னிடம் நெஞ்சு செலுத்தியவர்களாய்

என்பால் உயிரினார்

என்னிடம் அமைந்த வாழ்வையுடையவர்களாய்

தன் நிலையில் தம் சார்வு தம்மில் உணர்த்தி

தாம் தாம் அனுபவித்த எனது இயல்வான குணங்களை ஒருவர்க்கொருவர் அறிவிப்பவர்களாய்,

பின்னியலால்

எனது அவதாரசேஷ்டிதங்களோடு

எனை

என்னை

என்றும் சொல்லி

எப்போதும் பேசி

எல்லி பகல் ஒன்றின்றி ஏய்ந்து

இரவு பகல் என்னும் வாசியில்லாமல் பொருந்தி

சுகிப்பர்

(பேசுகிறவர்கள் ஸ்வயம் பரயோஜனமான பேச்சாலே) இன்புறுகின்றனர்

மிக உகப்பர்

(கேட்கிறவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லாலே) இன்புறுகின்றனர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top