பகவத் கீதை வெண்பா

ஏதுக்குந் தோற்றநா னென்னா னடப்பதிதென்
றீதை யறிந்தே யெனையடைவர் – மீதுற்ற
ஞானியரா யென்பா னலஞ்சேர் மனத்துடனே
தானியல்வ ரானவர்க டாம்.        10.8

நான்

நான்

ஏதுக்கும் தோற்றம்

எல்லா உலகிற்கும் உத்பத்தி காரணமாகிறேன்

என்னால்

என்னாலேயே

இது

பொருள்கள் அனைத்தும்

நடப்பது

செயல்படுகிறது

என்று ஈதை

என்கிற இந்த என்னுடைய இயல்வான தடையற்ற செல்வத்தையும், கல்யாண குணயோகத்தையும்

அறிந்தே

அநுஸந்தித்தே

மீதுற்ற ஞானியராய்

தலைசிறந்த ஜஞானிகளாய்

என்பால் நலம் சேர் மனத்துடனே தான் இயல்வர் ஆனவர்கள தாம்

என்னிடம் பேரன்பு கொண்ட நெஞ்சோடு செயல்புரிகின்றவர்கள்

எனை

(எல்லாக் கல்யாணகுணங்களோடும்) கூடிய என்னை

அடைவர்

உபாஸிப்பார்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top