பகவத் கீதை வெண்பா இந்த விபூதியையும் யோகத் தையுமெவனென் சந்த மெனவறியுந் தத்துவமா – யிந்தவவன் காதலமர் பத்தியுடன் கம்பியா மற்கூடு மாதலிலோர் சங்கையில்லை யாங்கு. 10.7 இந்த விபூதியையும் (எல்லாப் பொருள்களும் எனக்கு அதீனமாயிருக்கையாகிற) இந்தச் செல்வத்தையும் யோகத்தையும் தாழ்வுகளுக்கு எதிர்த்தட்டானவனாய், கல்யாண குணங்களோடு கூடினவனாயிருக்கும் பெருமையையும் எவன் எவனொருவன் என் சந்தமென எனக்கே உரியதென்று தத்துவமாய் அறியும் உள்ளபடி அறிவானோ இந்த அவன் இத்தகைய அவன் காதல் அமர் பத்தியுடன் என் விஷயத்தில் காதல் பொருந்திய பக்தியோகத்தோடு கம்பியாமல் கூடும் ஆதலில் அசைக்கமுடியாதபடி கூடப் பெறுவானாகையால் ஆங்கு இவ்விஷயத்தில் ஓர் சங்கை இல்லை எந்த ஐயமும் இல்லை. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0