பகவத் கீதை வெண்பா முன்னேழ் முனிகள் முகஞ்சர் மனுநால்வ ரென்னேய் நினைவா லியல்வுறுவ – ரின்னேதாம் மானசராய்த் தோன்றியிந்த மண்ணுலகி லெவ்வுயிர்க்குந் தானசைவில் மெய்யளிப்பர் தக்கு . 10.6 முன் ஏழ் முனிகள் முதல் மந்வந்த்ரத்தில் இருந்த (ப்ருகு முதலான) ஏழு மஹரிஷிகளும் முகம் சேர் மனு நால்வர் முக்கியத்துவத்தையுடைய நாலு மநுக்களும் என ஏய நினைவால் இயல்வுறுவா எனது ஸங்கல்பத்தால் செயல் புரிவார்கள் இன்னே இப்படி என் அதீனமாயிருந்து தாம் மானசராய் தோன்றி தாம் (ப்ரஹ்மாவின்) மாநஸபுத்ரர்களாய் உண்டாகி இந்த மண்ணுலகில் எவ்வுயிர்க்குந்தான் இந்நிலவுலகில் காணப்படும் எல்லா ஜீவராஶிகளுக்கும் தக்கு தம் ஸந்ததிகளின் மூலம் அசைவில் இடைவிடாமல் மெய் அளிப்பர் ஶரீரத்தைக் கொடுப்பர். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0