பகவத் கீதை வெண்பா

கொல்லாமை யொப்புகப்பு குன்றாத தவந்தானஞ்
சொல்லார் புகழபழியாந் தொல்பொருள்க – ளெல்லாந்தா
னென்னாலே யெவ்வுயிர்க்கு மேய்ந்த பலவகையா
முன்னாலே வாதியலு மூண்டு.        10.5

புத்தி

மனத்தின் ஆராயும் திறமை

அறிவு

(சித் அசித் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றிய) உறுதி

மயக்கறுதல்

(ஒன்றை மற்றொன்றாக நினைக்கும்) மயக்கத்தின் நீக்கம்

பூண்பொறைதான்

(கோபத்துக்குக் காரணமிருக்கும் போதும்) பொறுமை கொள்ளுதலாகிற அணிகலன்

சத்தியம்

உண்மையுரைக்கும் மனப்பானமை

ஐம்புலனகள் சார்ந்து அத்தியில்பில் அடக்கல்

வெளி இந்திரியங்களைத் தாழ்ந்த விஷயங்களில் செல்லாதபடி அடக்குதல்

சாந்தி

மனத்தை அவ்வாறு அடக்குதல்

சுகம்

ஆத்மாவுக்கு அநுகூலமான அநுபவம்

துக்கம்

ஆத்மாவுக்கு பரதிகூலமான அநுபவம்

தகும் உண்மை

(அநுகூலாநுபவத்தினால் ஏற்படும் மனத்தின்) இன்பமிகு நிலை

இன்மை

(ப்ரதிகூலாநுபவத்தினால் ஏற்படும் மனத்தின்) துன்பமிகு நிலை

ஏந்து பயம்

(வரப்போகிற துன்பத்தின் காரணத்தைக் காண்பதனால் உண்டாகும்) துன்பம்

இதன் இல்லாமை

(முற்கூறிய) துன்பம் நீங்கியிருத்தல்

இவை

ஆகிய இந்த மனநிலைகளும்

கொல்லாமை

பிறர் துன்பத்துக்குக் காரணமாயிராமை

ஒப்பு

(பொருள் வரவு செலவு பற்றித் தன் விஷயத்திலும் பிறர் விஷயத்திலும்) ஸமமான புத்தி உடையவனாயிருக்கை

உகப்பு

(எந்த ஆத்மாவைக் கண்டாலும்) இன்புறும் இயல்வுடையவனாதல்

குன்றாத தவம்

(ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டபடி போகத்தைச் சுருக்கி உடலை வருத்துதலாயிருப்பதாய,) அழியாத பலனையுடையதான தவம்

தானம்

தனது போக்யப் பொருள்களைப் பிறர்க்கு அளித்தல்

சொல்லார் புகழ

குணமுடையவன் என்று அனைவரும் சொல்லும் புகழ

பழியாம்

தோஷமுள்ளவன் என்னும் பிரஸித்தி ஆகிய

எவ்வுயிர்க்கும்

எல்லா ஜீவராஶிகளுக்கும்

பல வகையாம் தொல்பொருள்கள் எல்லாமதான

பலவகைப் பட்ட தொன்மையான மனநிலைகள் எல்லாமும்

என்னாலே ஏய்ந்த

என் ஸங்கல்பத்தாலேயே உண்டாகின்றன

உன்னாலே

ஜீவனான உன் ஸங்கல்பத்தாலே

ஆது

எந்த மனநிலை

மூண்டு இயலும்?

நன்கு செயல்படும்?

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top