பகவத் கீதை வெண்பா நீயுலவி நிற்கின்ற நீடுலகுக் கேய்ந்தபிதாவாயுமா ராத்தியனும் வண்குருவு – மாயுமுனக்கொப்பதுமீ தொன்றில்லை யுன்பெருமை மூவுலகிற்செப்பவெதி ரில்லாய் சிறந்து. 11.44 உன் பெருமை சிறந்து செப்ப எதிரில்லாய் உன் பெருமைக்குச் சிறப்பான உவமை காட்ட உவமானமில்லாதவனே! நீ நீ உலவி நிற்கின்ற நீடு உலகுக்கு ஏயந்த பிதா அசைவனவும் அசையாதனவும் அடங்கிய நீண்டகாலம் இருக்கும் உலகிற்குப் பொருந்திய தந்தையாவாய் வாயும் ஆராத்தியனும் தகுந்த வழிபடத்தக்கவனும் (நீயே) வண் குருவும் தந்தையிலும் சிறந்த ஆசாரியனும் (நீயே) ஆயும் உனக்கு ஆராயப்படும் உனக்கு ஒப்பது ஒப்பதோ மீது மிக்கதோ மூவுலகில் மூவகைப்பட்ட உலகில் ஒன்று இல்லை எதுவுமில்லை Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0