பகவத் கீதை வெண்பா ஆதித் தியர்வசுக்க ளங்கரர்க ளச்சுனிகள்சாதித் திரள்மருத்துத் தங்களைப்பார் – மீதுற்றுப்பல்வகையாய் முன்காணாப் பாராய்நீ பார்த்தனேநல்வகையா லாச்சரிய நன்கு. 11.7 பார்த்தனே! அர்ஜுனா! அங்கு அவ்வுருவில், ஆதித்தியர் (பன்னிரு) ஆதித்யர்கள், வசுக்கள் (எட்டு) வஸுக்கள், அரர்கள் (பதினொரு) உருத்திரர்கள், அச்சுனிகள் (இரு) அஶ்விநீ தேவர்கள், மருத்து (நாற்பத்தொன்பது) வாயுதேவதைகள், சாதித்திரள் தங்களை (என்று) வகைவகையாகத் திரண்டிருப்பவர்களை, பார் காண்பாய், மீதுற்று மிகுந்தவையாய், பலவகையாய் (காணப்படும்) பலவகைப்பட்ட பதார்த்தங்களையும், முன் காணா நல்வகையால் ஆச்சரியம் இதுவரை எங்கும் எவரும் காணாத நன்மைகளையுடைய ஆஶ்சர்ய ரூபங்களையும், நீ நீ நன்கு பாராய் நன்றாகப் பார்ப்பாயாக. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0