பகவத் கீதை வெண்பா முன்னியம்பும் பார்த்தனுக்கு மூதிறைவன் செப்பினா னென்னியலு மேனி யிதுகண்டா – யந்நிலைதான் காண்பரிதிம் மேனிதனைக் காண்பான் கணிசிப்பர் சேண்பயிலும் வானவர்கள் சேர்ந்து. 11.53 முன் இயம்பும் பார்த்தனுக்கு முற்கூறியபடி சொன்ன அர்ஜுனனைக் குறித்து மூது இறைவன் அனாதி புருஷனான கண்ணன் செப்பினான் கூறினான், என் இயலும் மேனி இது கண்டாய் என்னுடைய இயல்பான இந்த யாதொரு திருமேனியைக் கண்டாயோ அந்நிலை தான் அத்திருமேனி காண்பரிது காண்பதற்கு அரியதாகும் சேண் பயிலும் வானவர்கள் உயரேயுள்ள உலகங்களில வாழும் தேவர்கள் இம்மேனிதனை காண்பான் இந்தத் திருமேனியைக் காண்பதற்காக சேர்ந்து கணிசிப்பர் வாசியில்லாமல் விரும்பியிருப்பார்கள் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0