பகவத் கீதை வெண்பா

வேததவந் தானத்தான் மிக்கசீர் யாகத்தால்
மீதிங்கிவ் வண்ண மிகமேவிப் – போதத்துக்
காணலுற லாகேனான் கண்டென்னை நீபற்ற
நீணிலத்துக் கேற்க நிகழ்ந்து.        11.54

நீணிலத்துக்கு

நீண்ட இவ்வுலகிற்கு (வந்திருக்கும்)

என்னைப்பற்ற நிகழ்ந்து நீ கண்டு ஏற்க

என்னைப் பற்றுவதற்காக இப்போது நீ கண்டதுபோலே

நான்

நான்

வேத தவம் தானத்தால்

வேதத்தைக்கொண்டும், தவத்தைக் கொண்டும், தானத்தைக்கொண்டும்

மிக்க சீர் யாகத்தால்

மிகச் சிறப்புடைய வேள்வியைக் கொண்டும்

இங்கு இவ்வண்ணம்

இவ்வுலகில் இவ்வண்ணமாக

மிக மேவி

மிகப் பொருந்தி

போதத்து

அறிவினால்

மீது காணலுறல் ஆகேன்

நன்றாகக் காணமுடியாதவன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top