பகவத் கீதை வெண்பா வேண்டுதலி லான்றூயான் றககன் விருப்புறா னீண்டுபதைப் பறறிருப்பா னெத்தொழிலு – மூண்டுபுறததேதியலா தேநிகழும் யோகத்தா னென்பத்தி யாதியல்வா னென்னுகப்பி னான். 12.16 வேண்டுதலிலான் ஆத்மா தவிர்ந்த எல்லா வஸ்துக்களையும் விரும்பாதவனாய் தூயான் ஆஹாரஸுத்தியை யுடையவனாய் தக்கன (ஸாஸ்த்ரங்களில சொல்லப்பட்ட க்ரியைகளைச் செய்வதில்) வல்லவனாய் விருப்புறான (மற்ற கார்யங்களில்) விருப்பமில்லாதவனாய் ஈண்டு பதைப் பற்றிருப்பான் (ஸாஸ்த்ரீய க்ரியைகளைச் செய்வதனால் தவிர்க்கவொண்ணாமல் ஏற்படும் துன்பங்களினால்) துன்புறாதவனாய் எத்தொழிலும் மூண்டு புறத்து ஏது இயலாதே நிகழும் யோகத்தான் (ஸாஸ்தரீய கர்மங்கள் தவிர்ந்த) மற்ற கர்மங்கள் அனைத்தையும் தொடங்காமலே விடுகின்ற கர்மயோக நிஷ்ட,னாய் என் பத்தி யாது இயல்வான் என்னிடம் அன்போடு எல்லாக் கர்மங்களையும் அனுஷ்டிப்பவன் என் உகப்பினான் எனக்கு இனியவன் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0