பகவத் கீதை வெண்பா

சொல்லரிதாய நுண்ணியதா யெங்குந் தொடர்புடைத்தா 
யல்லவைபோற் சிந்திப் பரிதாகிப் – பல்லவற்றுக்
கொத்துச் சலியா துறுதியுறு மக்கரத்தில்
வைத்து்ப பயில்வார் மனம்.      12.3

சொல்லரிதாய

(தேஹத்தைக் காட்டிலும் வேறு பட்டிருக்கையால் தேவர் முதலான ஸப்தங்களாலே) குறிப்பிடத்தகாததாய்

நுண்ணியதாய்

(கண் முதலான இந்திரியங்களால்) காணப்படாத ஸூக்ஷ்மபபொருளாய்

எங்கும் தொடர்புடைத்தாய்

எல்லா தேகங்களிலும் தொடர்புடையதாய்

அல்லவைபோல் சிந்திப்பரிதாகி

(ஆயினும்) அந்தந்த தேஹஸ்வரூபமாக நினைத்தற்கரியதாய்

அவற்றுக்கு ஒத்து

எல்லாத் தேகங்களுக்கும் பொதுவாயிருப்பதாய்

சலியாது

தன் ஸவரூபத்திலிருந்து நழுவாததாய்

உறுதியுறும்

நித்தியமானதான

அக்கரத்தில்

(தம) ஜீவாத்மஸ்வரூபத்தில்

மனம் வைத்து

நெஞ்சை ஈடுபடுத்தி

பயில்வார்

(அதை அடைவதற்கு) உபாஸிப்பார்கள் (கைவல்ய நிஷ்டர்கள்) 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top