பகவத் கீதை வெண்பா சோதிகளின் மிக்கதுதான் சோதியாய்த் தொக்கதமம்மீதுபர மென்னுமுரை மேவுமதாய்ப் – போதமெனத்தானறிய லாவறிவாற் சாருமதா யாவர்க்குமூனமற வுள்ளிருக்கு முற்று . 13.17 அதுதான் அந்த ஆத்மா சோதிகளின் மிக்க சோதியாய் (விளக்கு ஸூரியன் முதலான) சோதிகளையும் விளங்கச்செய்வதாகையாலே அவற்றிலும் மிக்க சோதியாயிருப்பதாய் தொக்க தமம் மீது பரம் என்னும் உரை மேவுமதாய் எங்கும் வியாபித்துள்ள மூலப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானதென்று சொல்லப்படுவதாய் போதம் என தான் அறியலா ஞானத்தையே இயல்வாகவுடையது என்று அறியத்தக்கதாய் அறிவால் சாருமதாய் (அமாநித்வம் முதலான) ஜ்ஞான ஸாதனங்களால் அடையப்படுவதாய் யாவர்க்கும் உள் மனிதர் முதலான ஜீவர்களுடைய ஹ்ருதயத்திலே ஊனமற உற்று இருக்கும் குறைவில்லாமல் பொருந்தி இருக்கும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0