பகவத் கீதை வெண்பா ஏய்ந்த பிரகிருதி யித்தாற் கருமமெல்லாம்வாய்ந்தியலு மென்றறிந்து மன்னுயிரை-யாய்ந்தவகத்தா விவனென்று காண்பா னெவனவனேசத்தா முணர்வுடையான் றான் 13.29 கருமம் எல்லாம் எல்லாச்செயல்களையும் ஏய்ந்த பிரகிருதி இத்தால் வாய்ந்து இயலும் என்று அறிந்து (உயிரோடு) பொருந்தியிருக்கும் இந்தப் பிரக்ருதியினாலுண்டான ஸரீரத்தாலேயே செய்யப்படுபவை என்று அறிந்து ஆய்ந்த மன் உயிரை ஸரீரத்திலும் வேறுபட்ட நிலையான ஆத்மாவை அகத்தா இவன் என்று காண்பான் எவன் அச்செயல்களைப் புரியாதவன் என்று எவன் காண்கிறானோ அவனேதான் அந்த மனிதனே சத்தாம் உணர்வுடையான் நல்லறிவுடையவனாகிறான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0