பகவத் கீதை வெண்பா

நின்ற நசையறுத னேர்புதல்வர் தாரமனை
யொன்று மனமங் கொழிவித்த- லென்றுஞ்சம
னார்ந்தே யிருத்த லுகப்புவெறுப் பாம்பொருள்கள்
சேர்ந்து வரலிற் றெளிந்து   13.9

நின்ற நசை அறுதல்

ஆத்மாவைத்தவிர்ந்த மற்ற விஷயங்களில் அபிமானமற்றிருக்கை

நேர் புதல்வர் தாரம் மனை ஒன்றும் மனம் அங்கு ஒழிவித்தல்

தனக்கு அமைந்திருக்கும் மக்கள் மனைவி வீடு முதலானவற்றில் விருப்பத்தை விடுதல்

உகப்பு வெறுப்பாம் பொருள்கள் சேர்ந்து வரலில்

விரும்பியதோ விரும்பாததோ வந்தடையும்போது

என்றும்

எப்போதும்

தெளிந்து

தெளிவுடையவனாய்

சமன் ஆர்ந்தே இருத்தல்

ஆனந்தமோ வெறுப்போ அடையாமல் மனம் ஒருநிலைப்பட்டிருக்கை

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top