பகவத் கீதை வெண்பா

காய முயிரிவற்றின் கண்ணார் பிரிவிவ்வா
றேய வறிவா மெழிற்கண்ணான் – மேயவுடல்
வீடமர்வு தானு மிகவுணர்வார் தாம்பரமாம்
பீடமர்வர் தன்மையினைப் பெற்று   13.34

காயம் உயிர் இவற்றின் கண் ஆர் பிரிவு

க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களாகிற இரு தத்துவங்களின் பலவகைப்பட்ட வேறுபாடுகளையும்

மேய உடல் வீடு அமர்வு தானும்

ப்ரக்ருதி பரிணாமமான உடலிலிருந்து விடுபடுவதற்குக் காரணமான அமாநித்வம் முதலான குணங்களையும்

இவ்வாறு

இந்த அத்தியாயத்தில சொன்ன முறையில்

ஏ அறிவாம் எழில் கண்ணால்

(க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களைப்) பகுத்தறியும் அறிவாகிற அழகிய கண்ணால்

மிக உணர்வார் தாம்

நன்றாக அறிபவர்கள்

பரமாம் தன்மையினைய் பெற்று பீடு அமர்வர்

ஸம்ஸார பந்தமற்ற தம் ஆத்மாவை அடைவதாகிற செல்வத்தைப் பெறுவர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top