பகவத் கீதை வெண்பா ஈண்டவனுக் கண்ண லியல்பின் றகவுரைத்தான் பாண்டவனே முந்திப் பரந்தவொளி – மூண்டியற்றி மோகமுள வற்றை முனியான்முன் மூண்டத்து வேக நசையிலான் மிக்கு. 14 . 22 ஈண்டு இப்படிக்கேட்டவுடன், அண்ணல் கண்ணன், அவனுக்கு அந்த அர்ஜுநனுக்கு, இயல்பின் தகவு (குணங் கடந்தவனுடைய) லக்ஷணத்தின் தன்மைகளை, உரைத்தான் (பின் வருமாறு) கூறினான். பாண்டவனே! பாண்டுபுத்திரனே! முந்தி பரந்த ஒளி முற்பட்டு வெளிப்பட்ட (ஸத்வகுணகார்யமான) அறிவு, மூண்டியற்றி (ரஜோகுணகார்யமான) பெருமுயற்சி, மோகம் (தமோ குணகார்யமான) மயக்கம் (ஆகியவை), உளவற்றை (அநிஷ்டமாகவோ அதற்கு ஸாதனமாகவோ) வந்தடைந்திருக்கும்போது, முனியான் (குணங் கடந்தவன் அவற்றை) வெறுக்கமாட்டான் முன் மூண்டத்து (இஷ்டமாகவோ அதற்கு ஸாதனமாகவோ) முதலில் வந்திருந்து நீங்கினவற்றை, மிக்கு வேக நசை இலான் மிக அதிகமாக ஆசைப்படுவதுமில்லை. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0