பகவத் கீதை வெண்பா பொறிவாயி லெங்கும் புணரு மொளியா மறிவான தெப்பொழுதுண் டாகுங் – குறியாலே மன்னுடம்பி லப்பொழுது வாய்ந்துயருஞ் சத்துவமா மென்னுமது தானறிவா னிங்கு. 14 . 11 இங்கு இவ்வுலகில் மன்னு உடம்பில் (ஜீவனோடு) பொருந்தியிருக்கும் உடலில் பொறி வாயில் எங்கும் (கண் முதலிய) ஞானம் வெளிப்படும் இந்திரியங்களாகிற வாசல்கள் அனைத்திலும் புணரும் ஒளியாம் அறிவானது பொருள்கள் உள்ளபடி பிரகாஶிப்பதற்கு உறுப்பான அறிவானது எப்பொழுது உண்டாகும் எந்த சமயத்தில் உண்டாகிறதோ அப்பொழுது அந்த சமயத்தில் குறியாலே அந்த அடையாளத்தாலே சத்துவம் வாய்ந்து உயருமாம் என்னுமது தான் ஸத்வகுணமே (ரஜஸ் தமஸ்ஸுக்களைக் காட்டிலும்) மேலோங்கி நிற்கிறது என்பதை அறிவான் (ஜீவன்) அறியக் கடவன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0