பகவத் கீதை வெண்பா ஈயாமை வீணுழற்றி யேய்ந்தகரு மத்தொடக்கஞ் சாயா புலனெழுச்சி தன்னாசை – யோயாம லுண்டா மிவைகண்டா யுற்றிரசத் தோங்கதனால் வண்டாருந் தார்விசயா மற்று. 14 . 12 வண்டு ஆரும் தார் விசயா வண்டு நிறைந்த மாலை சூடிய விஜயனே! ஈயாமை எவருக்கும் எதுவும் கொடுக்காமையாகிற கருமித்தனம் வீண் உழற்றி பயனற்ற செயல்பாடு ஏய்ந்த கருமத் தொடக்கம் ஒரு பலனைக் குறித்துக் கர்மங்களைத் தொடங்குவது சாயா புலன் எழுச்சி இந்திரியங்கள் அடங்காமல் எழுவது, (புலன்) தன் ஆசை விஷயங்களில் ஆசை மற்று இவை என்னும் இவை இரசத்து ஓங்கு அதனால் ரஜோ குணம் ஓங்கி நிற்பதால் ஓயாமல் உற்று உண்டாம் கண்டாய் இடைவிடாமல் பொருந்தி உண்டாகும் என்று அறிவாய். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0