பகவத் கீதை வெண்பா இந்தவுடல் விட்டேக லேய்ந்து மிதிலிருந்தும் வந்துபுசித் துங்குணத்தின் மன்னிவனை – வந்தறிவின் மூட ருணர முகமறியார் முற்றுணர்வர்நாட வுணர்வழியார் நன்கு. 15.10 இந்த உடல் விட்டு ஏகல் ஏய்ந்தும் (இருக்கின்ற) இந்த உடலைவிட்டுப் புறப்படத்தொடங்கியும் இதில் இருந்தும் (அல்லது) இதிலேயே இருந்தும் வந்து புசித்தும் (அல்லது குணமயமான விஷயங்களை) அடைந்து அநுபவித்தும் குணத்தின் மன்னு இவனை குணமயமான தேவாதி சரீரங்களில் சேர்ந்திருக்கும் இந்த ஜீவனை வந்தறிவின் மூடர் வந்தேறியான தேஹமே ஆத்மா எனும் நினைவினாலே மயங்கியிருப்பவர்கள் உணர முகம் அறியார் (தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்ட அறிவு வடிவினனாய் இருப்பவன் ஜீவன் என) அறிய வழியும் காணார்கள் நாட உணர்வு அழியார் (முற்கூறிய எந்த நிலையிலும் உள்ளபடி) அறியவல்ல அறிவுகெடாத ஞானிகள் நன்கு முற்றுணர்வர் (ஆத்மா தேஹத்தைக்காட்டிலும் வேறுபட்டதென்றும் ஞானவடிவானதென்றும்) நன்கு முழுவதும் அறிவார்கள் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0