பகவத் கீதை வெண்பா செவிகண் டுவக்குடன் சிங்ஙவை நா சிச்சேர்ந் தவிவின்றி நெஞ்சோ டமர்ந்து – நவிவில்லாப் புன்பொருள்க ளெல்லாம புசித்தியலு மிவ்வுயிர்தானின்புறுதல் சேர்நசையா லிங்கு. 15.9 இங்கு இவ்வுயிர்தான் இந்த லீலாவிபூதியில் உள்ள பத்த ஜீவன் இன்புறுதல் சேர் நசையால் தான் இன்பம் அடையவேண்டும் என்னும் ஆசையால் செவி செவி கண் கண் துவக்குடன் மெய் சிங்ஙவை நாக்கு நாசி சேர்ந்து மூக்கு என்னும் ஐந்து ஞானேந்த்ரியங்களும் சேர்ந்து அவிவின்றி இடைவிடாமல் நெஞ்சோடு அமர்ந்து (இவ்வைந்தையும் நியமிக்கும்) மனத்தோடு கூடி நவிவு இல்லா அழிவில்லாத புன் பொருள்கள் எல்லாம் தாழ்ந்த ப்ராக்ருதப் பொருள்கள் அனைத்தையும் புசித்து இயலும் அனுபவித்து வாழ்கிறான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0