பகவத் கீதை வெண்பா எந்தவுடல் விட்டெவ் வுடலடையு மீசனவன் சந்தமுட னங்கிவற்றைத் தான்வாங்கிப் – பந்தமுடன்றானேகும் வாயுத்தன் சார்மணங்கள் வாங்கியே. 15.8 ஈசனவன் இந்த்ரியங்களை நியமிக்கும் அந்த ஜீவன் எந்த உடல் விட்டு யாதொரு உடலைவிட்டுக் கிளம்பி எவ்வுடல் அடையும் மற்றொரு உடலை அடையும்போது அங்கு அந்த விடும் உடலிலிருந்து இவற்றை இந்த இந்த்ரியங்களை சந்தமுடன் தான் வாங்கி விருப்பத்துடன் எடுத்துக்கொண்டு பந்தமுடன் தான் ஏகும் கர்ம பந்தத்தோடு தானே (அடையும் ஸரீரத்துக்குச்) செல்கிறான் வாயு காற்றானது பூநேர்நின்று பூ முதலானமணம் மிக்க பொருள்களைத் தடவிச் செல்லும்போது தன் சாரமணங்கள் வாங்கியே அந்தப் பூ முதலானவற்றிலுள்ள மணத்தோடு கூடிய துகள்களை எடுத்துக்கொண்டே ஏகும் அது போல வேறிடத்துக்குச் செல்வது போன்றது இது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0