பகவத் கீதை வெண்பா என்னாரு மமசமா யிவ்வுலகிற் சீவனாய் முன்னார நின்று முயலுமுயிர் – தன்னாரு மைய புலனு நெஞ்சு மவையாறை யும்வலிக்கும்வெம்புலத்துச் சேர விரைந்து. 15.7 என் ஆரும் அம்சமாய் எனது பகுதியான அம்சமாய் முன் ஆர நின்று முயலும் உயிர் அனாதிகாலமாக நித்யமாக இருந்து கொண்டு செயல் புரியும் ஜீவர்களில் ஒருவன் இவ்வுலகில் இந்த லீலாவிபூதியில் சீவனாய் பக்த ஜீவனாயிருந்துகொண்டு தன் ஆரும் தன்னுடைய உடலில் இணைந்திருக்கும் ஐம்புலனும் மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் நெஞ்சும (இவற்றை நியமிக்கும்) நெஞ்சுமாகிற அவை ஆறையும் ஆறு இந்திரியங்களையும் வெம் புலத்து சேர து ன்பத்தை விளைக்கும் சப்தம் முதலான விஷயங்களில் ஈடுபடும்படியாக விரைந்து வலிக்கும் விரைவாகச் செயல்படுத்துவான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0