பகவத் கீதை வெண்பா ஆங்கிவரி லுத்தமனே யாம்புருட னன்னியனாம் பாங்கிற் பரமான்மா வென்றுரைத்தா-னோங்கியே தாம்புகுந்து நின்றே தரித்துலக மூன்றிறையா யோம்புமவன் குன்றாது மேல். 15.17 பாங்கில் தன்பெருமைகளால் பரமான்மா என்று உரைத்தான் பரமாத்மா என்று (சாஸ்திரங்களில்) உரைக்கப்பட்டவனாய் உலகம் மூன்று அசித் பத்த ஜீவன் முக்தாத்மா என்று மூன்று பொருள்களையும் ஓங்கியே தாம் புகுந்து நின்றே நன்றாக வியாபித்து நின்று தரித்து (அவற்றைத்) தாங்குகிறவனாய் மேல் அதற்கு மேல் குன்றாது தான் அழிவற்றவனாய் இறையாய் ஓம்புமவன் (அவற்றை) ஸ்வாமியாயிருந்து நியமிப்பவனாய் ஆங்கு அக்காரணங்களாலே இவரில் இந்த க்ஷராக்ஷரபுருஷர்களைக் காட்டிலும் உத்தமனே ஆம் புருடன் மிக மிக மேலான புருஷனாயிருப்பவன் அன்னியனாம் (முற்கூறிய க்ஷராக்ஷரபுருஷர்களைக் காட்டிலும்) வேறுபட்டவனாவான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0