பகவத் கீதை வெண்பா

எத்தகவால் யான்கரன்மீ தேகியே யக்கரனா
முத்தனிலு முத்தமனா வுற்றுயர்ந்தே-னித்தகவால்
வேத முலகிவற்றின் மேவுபுரு டோத்தமனா
வோத வுரைசிறந்தே னுற்று.       15.18

யான்

நான்

எத்தகவால்

எந்தக்காரணத்தால்

கரன்மீது ஏகியே

க்ஷரபுருஷனைக்கடந்து நிற்பவனாய்

அக்கரனாம் முத்தனிலும் உத்தமனா உற்று உயர்ந்தேன்

அக்ஷரபுருஷனான முக்தாத்மாவைக்காட்டிலும் சிறந்தவனாக விளங்கி நிற்கிறேனோ

இத்தகவால்

இக்காரணத்தால்

வேதம் உலகு இவற்றில்

ஸ்ருதி ஸ்ம்ருதி ஆகியவற்றில்

மேவு புருடோத்தமனா உற்று ஓத உரை சிறந்தேன்

புருஷோத்தமன் என்னும் பொருத்தமான பெயரை ஓதலாம் படி பிரசித்திபெற்றிருக்கிறேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top