பகவத் கீதை வெண்பா

என்னையிங்கே யிவ்வண்ண மேய்ந்தப்புரு டோத்தமனா
முன்னை மயர்வொழித்து முற்றுணர்ந்தான்-பின்னை யவன்
எல்லா மறிந்தே யெனையடைந்து பத்தியுடன்
செல்வானெவ் வாறும் சிறந்து.         15.19

இங்கே

இவ்வுலகில்

இவ்வண்ணம்

இவ்வண்ணமாக

ஏய்ந்த புருடோத்தமனாம் என்னை

பொருத்தமான பொருளுடைய 'புருஷோத்தமன்' என்று சொல்லப்படும் என்னை

முன்னை மயர்வு ஒழித்து

அனாதிகாலமாக உள்ள அஜ்ஞானம் நீங்கப்பெற்று

முற்று உணர்ந்தான் அவன்

முழுதும் அறிகின்றவன்

பின்னை

பின்வரும்

காலமெல்லாம் எல்லாம் அறிந்தே

என்னை அடைவதற்குரிய வழியனைத்தையும் அறிந்தவனாய்

எவ்வாறும் பத்தியுடன் சிறந்து எனை அடைந்து செல்வான்

என்னை அடையும் வழியான பக்திமுறைகளனைத்தாலும் பக்திசெய்தவனாகிறான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top