பகவத் கீதை வெண்பா

அஞ்சாமை நெஞ்சுதெளி வாய்ந்தறிவாம் யோகநிலை
யெஞ்சாத தான மிசைந்ததமந் – துஞ்சாத வெச்ச
மறையுரைத்த லேலுந் தவமுயற்றி
நிச்சந் தனிற்செவ்வை நேர்ந்து.        16.1

பார்த்தனே!

குந்தீபுத்திரனே!

அஞ்சாமை

பயமின்மை

நெஞ்சுதெளிவு

மனத்தின் பரிசுத்தி

ஆய்ந்து அறிவாம் யோகநிலை

ஆத்மஸ்ரூபத்தை (ப்ரக்ருதியினின்றும்) பிரித்து அறிந்து சிந்தித்திருத்தல்

எஞ்சாத தானம்

குறைவில்லாத தானம்

இசைந்த தமம்

மனத்தை ஸப்தாதிவிஷயங்களில் பாயாதபடி நன்கு தடுக்கப் பழகுதல்

துஞ்சாத எச்சம்

பலனில் பற்றற்று பகவதாராதனமாகப் பஞ்சமஹாயஜ்ஞங்களை அநுஷ்டித்தல்

மறையுரைத்தல்

வேதாத்யயனத்தில் ஈடுபடுதல்

ஏலும் தவமுயற்றி

(ஏகாதசி உபவாஸம் முதலான) நல்ல தவங்களில் முயற்சிகொள்ளுதல்

நிச்சம் தனில் நேர்ந்து செவ்வை

தினந்தோறும் முக்கரணங்களிலும் ஒருபடிப்பட்டிருத்தல்

கொல்லாமை

எந்த ஜீவராசியையும் துன்புறுத்தாமை

மெய்ம்மை

உயிர்களுக்கு நன்மையான உண்மையையே உரைத்தல்

வெகுளாமை

(பிறரைத் துன்புறுத்துவதில் மூட்டும்) கோபம் இல்லாதவனாயிருக்கை

கோள் விடுதல்

(தனக்கு நன்மை விளைக்காத) உடைமைகளைக் கைவிடுதல்

தொல் ஆர் சமம்

தொன்மைமிக்க வெளி இந்தரியங்களை விஷயங்களில் பாயாமல் நன்கு தடுக்கப் பழகுதல்

குறனை சொல்லாமை

(பிறர்க்குத் தீங்கு விளைக்கும்) கோட்சொல்லுதலைத் தவிர்த்தல்

எல்லாத்தும் மேவு தயை

எல்லா உயிர்களிடத்தும் அவற்றின் துன்பங்கண்டு பொறாமலிருத்தலாகிற கருணை

தான் சலிப்பு மேவாமை

விஷயங்களில் தான் ஈடுபாடு இல்லாமலிருத்தல்

மென்மை

(நல்லோர்கள் அணுகலாம்படி) மென்மையுடனிருக்கை

நாண்

(தகாத செயல்களைச் செய்வதில்) வெள்கியிருத்தல்

பாவு பொருள் சாபலம் தீர் பண்பு

அருகிலிருக்கும் ஆசைப்படத்தக்க பொருளிலும் ஆசைப்படாமலிருக்கை )

தேசு

(தீயவர்களால்) வெல்ல வொண்ணாமை

பொறை

(துன்புறுத்துகிறவர்களிடமும்) பொறுமை

திண்மை

(பேராபத்து வந்தாலும்) செய்ய வேண்டியதில் உறுதியாயிருக்கை

தூய்மை

(முக்கரணங்களிலும் சாஸ்திரங்களிற் சொல்லிய) தூய்மையாகிற அநுஷ்டானத் தகுதியை உடையவனாயிருக்கை

சினம் அறுதல்

பிறர் நற்செயல்களைத் தடுக்கும் துரோகம் செய்யாமை

மாசுநிகழ் மிகைசேர்மானம் ஒழிவு

குற்றத்தை விளைக்கும் மிகுந்த கர்வத்தை விடுதல்

ஆக இவை

என்னும் இந்த குணங்கள்

தெய்வம் எனும் சேர்ந்து பிறந்தாற்கு

(எம்பெருமானுடைய ஆணையைப் பின்பற்றி நடக்கும்) தெய்வப் பிறவியாகிற செல்வத்தை உடையவனுக்கு

மெய் வகையால் மிக்கு உண்டே

உண்மையாகவே மிகவும் உள்ளனவாயிருக்கும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top