பகவத் கீதை வெண்பா

வேண்டா ததிற்பயனை வேதவிதி மேவிமனம்
பூண்டா ரியல்வாகப் புந்தித்து – மூண்டாங்கு
தாமியல்வ ரெச்சந் தகவான் முதற்குணத்தி
லாமெனவே கொள்க வறிந்து.        17.11

அதில் பயனை வேண்டாது

யாகத்தின் பலனில் நெஞ்சு செலுத்தாமல்

வேதவிதி மேவி

சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி

இயல்வாகப் புந்தித்து

(இந்தயாகம் எம்பெருமானுக்கு ஆராதன மாகையாலே) தானே பயனாய் இருப்பது என்று நினைத்து

மனம்பூண்டார்

(இதைச் செய்தேயாகவேண்டும் என்று) மனத்தில் உறுதி கொண்டவர்களாய்

ஆங்குமூண்டு தாம் இயல்வர்

அந்த யாகத்தில் சிறப்பாகச் செயல்படுபவர்களுடைய

எச்சம்

யாகம்

தகவால்

தன் தன்மையால்

முதல் குணத்தில் ஆம்

முக்குணங்களில் முதலாவதான ஸத்வகுணத்தை உடையது

எனவே

என்றே

அறிந்து கொள்க

அறிவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top