பகவத் கீதை வெண்பா

சேர்ந்த பயனினைந்தும் டம்பம் பொருட்டாயுஞ்
சார்ந்த தெதுபரதர் தந்தலைவா- கூர்ந்த
மனத்தாலவ் வெச்சத்தை வாய்ந்தறிநீ யந்த
வினத்தா லிடைக்குணத்த தென்று.         17.12

பரதர் தம்தலைவா

பரதகுலத்தில் உதித்தவர்களில் சிறந்தவனாய் இருப்பவனே!

சேர்ந்த பயன் நினைந்தும்

ப்ராக்ருத பலன்களில் விருப்பத்தோடும்

டம்பம் பொருட்டாயும்

டம்பம் காரணமாகவும்

சார்ந்தது எது

எந்த யாகம் அநுஷ்டிக்கப்படுகிறதோ

அவ்வெச்சத்தை

அந்த யாகத்தை

அந்த இனத்தால்

அதன் தன்மையால்

இடை குணத்தது என்று

நடுக்குணமாகிற ரஜோகுணத்தை உடையது என்று

கூர்ந்த மனத்தால்

கூர்மையான புத்தியால்

நீ

நீ

ஆய்ந்து அறி

ஆராய்ந்து அறிவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top