பகவத் கீதை வெண்பா

காயஞ் சொலவுமனங் காட்டுந் தவங்களவை
மேய குணங்கண் மிகுநெறியா- லாயவெனின்
மூன்றதனி நின்று முயலும் படியுரைக்க
வேன்றதனைக் கேணீ யினி.         17.14

காயம் சொலவு மனம் காட்டும் தவங்கள் அவை

உடல், சொல் மனம் ஆகிய முக்கரணங்களாலும் செய்யப்படும் மூன்று வகைப்பட்ட தவங்கள் ஒவ்வொன்றும்

மேய குணங்கள் மிகு நெறியால் ஆய எனின்

(செய்பவனிடம்) பொருந்தி நிற்கும் ஸத்வம் ரஜஸ, தமஸ் எனும் முக்குணங்களில் ஒவ்வொன்றின் மிகுதியாலே மூன்று வகைப் பட்டிருக்கின்ற காரணத்தாலே

மூன்று அதனினின்றும்

உடல் சொல் மனம் என்னும் முக்கரணங்களின் மூலம்

முயலும்படி உரைக்க

(மனிதன்) தவம் புரியும்படியை (நான்) சொல்ல

இனி

இனிமேல்

நீ

நீ

அதனை

அவ்விஷயத்தை

ஏன்று கேள்

கவனமாகக்கேட்பாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top