பகவத் கீதை வெண்பா

நாடு நலநினைந்து கொண்டாடி நன்கிறைஞ்சத்
தேடு மனநினைந்து டம்பத்தாற் – பீடுறவே
யேய்ந்ததவ நில்லா திடைக்குணத்த தாய்ச்சலித்து
மாய்ந்தறுமென் றேயுரைப்பர் மற்று.       17.19

நாடு

உலகத்திலுள்ளவர்கள்

நலம் நினைந்து

மனத்தால் நல்லவனாகமதித்து

கொண்டாடி

வாயால் புகழ்ந்து

நன்கு இறைஞ்ச

நமஸ்காரம் முதலியவைகளால் நன்கு பூஜை செய்வதற்கு

தேடு மனம் நினைந்து

விருப்பத்தை மனத்தில் கொண்டு

டம்பத்தால்

டம்பம் காரணமாக

பீடு உறவே ஏய்ந்த தவம்

ஸ்வர்க்கம் முதலான ப்ராக்ருத பலன்களை அடைவதற்குச் செய்யப்படும் தவம்

இடைக்குணத்ததாய்

நடுக்குணமாகிற ராஜஸகுணத்தால் உண்டாவதாய்

நில்லாது

நிலை நில்லாததாய் இருக்கையாலே

சலித்து

நழுவக்கூடியதாய்

மற்றும்

மேலும்

மாய்ந்து அறும்

அழிந்து ஒழியும்

என்றே உரைப்பர்

என்றே (அறிவாளிகள்) கூறுவர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top