பகவத் கீதை வெண்பா மூட மதியான் முயல்வுற்றுத் தம்முயிர்தான் பீடை மருவப் பிறர்கேடு – கூடவே யுற்றதவ மான துடனே கடைக்குணத்தைப்பற்றவரு மென்பர் பயின்று. 17.20 மூட மதியால் முயல்வுற்று (அறிவிலிகளாலே) தங்கள் பிடிவாதத்தாலே செய்யப்படுவதாய் தம் உயிர்தான் பீடை மருவ தம்மைத்தாமே வருத்திக் கொள்வதாகவும் உடனே பிறர் கேடு கூடவே அத்துடன் பிறர்க்கு அழ வைச் செய்வதாகவும் உற்ற தவமானது செய்யப்படும் தவத்தை பயின்று ஆராய்ந்து பார்த்து கடை குணத்தைப் பற்ற வரும் என்பர் கடைசி குணமான தமோகுணத்தினால் வருவது என்று (அறிவாளிகள்) கூறுவர் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0