பகவத் கீதை வெண்பா வேறுப காரத்தை விரும்பா தியல்வென்று கூறிடங் காலநலங் கொள்பவனைத் – தேறியே தான் கொடுக்குந் தானந்தான் சத்துவத்தி னின்றுமேல் வான்கொடுக்கு மென்பர் மதித்து. 17.21 வேறு உபகாரத்தை (கொடுப்பவனிடமிருந்து) வேறு ஒரு உதவியை விரும்பாது பெற விரும்பாமல் இயல்வு என்று கொடுப்பதையே பயனாகக்கொண்டு கூறு இடம் காலம் கொள்பவன் நலனைத் தேறியே ஸாஸ்த்ரத்தில் சொல்லப்படும் தேசம் காலம் தானம்வாங்குபவனாகிய பாத்திரம் ஆகியவற்றின் சிறப்பை ஆராய்ந்து மதித்துதான் கொடுக்கும் தானம் தான் தானாக உவந்து தானமே சத்துவத்தில் நின்று சத்துவகுணத்திலிருந்து விளைவதாய் மேல் வான் கொடுக்கும் என்பர் உயர்ந்த கதியைக் கொடுக்கும் என்று கூறுவர். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0