பகவத் கீதை வெண்பா சத்துவத்தர் சார்வமரர் தாமியக்க ரோடரக்கர் மத்தியத்தர் சேரும் வகையதுதான்- புத்திசெறுபுன்மைத் தமோகுணத்தர் பூதம் பிரேதகணந் தன்னைச் சமைந்தணைவர் தாம். 17.4 சத்துவத்தர்தாம் ஸத்வகுணத்தை மிகுதியாகக் கொண்டு ஸாத்விகஸ்ரத்தையை உடையவர்கள் அமரர் சார்வு தேவர்களை ஆராதிப்பர் வகையதுதான் அவ்வண்ணமாகவே மத்தியத்தர் தாம் நடுக்குணமான ரஜோகுணத்தை மிகுதியாகக்கொண்டு ராஜஸஸ்ரத்தையை உடையவர்கள் இயக்கரோடு அரக்கர் சேரும் யக்ஷர்களையும், அரக்கர்களையும் ஆராதிப்பர் புத்திசெறு புன்மைத் தமோகுணத்தர் தாம் அறிவை அழிக்கும் தாழ்வுடைய தமோகுணத்தை மிகுதியாகக்கொண்டு தாமஸ ஸ்ரத்தையை உடையவர்கள் பூதம் பிரேத கணம் தன்னைச் சமைந்து அணைவர் பூதகணங்களையும் பிரேத (இறந்தவர்) கணங்களையும் பொருந்தி ஆராதிப்பர் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0