பகவத் கீதை வெண்பா வாணாண் மனந்தெளிவு மன்னுவலி நோயாமை பூணாஞ் சுகமுகப்பைப் பொங்குவித்து – மாணார்ந்த தித்தித்து நெய்த்துத் திரமாய் மனோகரமா யொத்திடுமே முற்குணத்தி னூண். 17.8 முன் குணத்தின் ஊண் ஸத்வகுணத்தை மிகுதியாக உடைய உணவு மாண் ஆர்ந்த சிறப்புடைய வாணாள் ஆயுள், மனந்தெளிவு மனத்தில் தெளிந்த அறிவு மன்னுவலி நோயாமை நிலை நின்ற பலம் ஆரோக்யம் பூணாம் சுகம் உகப்பை விரும்பத்தக்க இன்பம் அன்பு ஆகியவற்றை பொங்குவித்து வளரச்செய்து தித்தித்து இனிப்புச்சுவையுடையதாய் நெய்த்து வழவழப்புடையதாய் திரமாய் நிலையான மனோகரமாய் (காணும்போதே) நெஞ்சை ஈர்ப்பதாய் ஒத்திடுமே அமைந்திருக்கும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0