பகவத் கீதை வெண்பா தேசகா வஞ்சிறப்புச் சிந்தியா தேற்பவன்பாலாசின்மை பாரா தவமதித்து – நேசஞ்செய் யாதரிப்ப தில்லாத வத்தானம் பிற்குணத்தை மீதரிப்ப தென்றுரைப்பர் மிக்கு. 17.23 தேசகாலம் சிறப்புச் சிந்தியாது தேசம் காலம் ஆகியவற்றின் சிறப்பை ஆராயாமலும் [சிறப்பற்ற தேசத்திலும் காலத்திலும்] ஏற்பவன் பால் ஆசின்மை பாராது தானம் வாங்குகிறவனிடம் குற்றம் இருக்கிறதா இல்லையா என்று ஆராயாமலும் [குற்றமுள்ளவனுக்கும்] அவமதித்து [வாங்குபவனை) அவமானம் செய்தும் நேசம் செய் ஆதரிப்பதில் லாத அன்பும் ஆதரவுமில்லாமலும் (அளிக்கப்படும்), அத்தானம் அந்த தானம் பிற்குணத்தை மிக்கு மீதரிப்பது கடைசி குணமான தமோகுணத்தை மிகவும் கொண்டது என்று உரைப்பர் என்று (பெரியோர்கள்) கூறுவர் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0