பகவத் கீதை வெண்பா

ஆர்ந்தபய னாசை யதுவிட் டகங்காரந்
தீர்ந்துதிட னாய்முயற்றி சென்றியன்று – சேர்ந்துவரும்
பேறிழவில் வேறுபடாப் பீடுடைய கர்த்தாவாம்
வீறியலுஞ் சத்துவத்தான் மிக்கு.        18.26

ஆர்ந்த பயன் ஆசை அதுவிட்டு

காமத்திற்கு உரிய பலனில் விருப்பத்தை விட்டு

அகங்காரம் தீர்ந்து

'நான் செய்கிறேன்' என்ற அபிமானமும் இல்லாமல்

திடனாய் முயற்றி சென்று இயன்று

தவிர்க்கவொண்ணாத துன்பத்தைப் பொறுத்திருக்கையாகிற தைரியம்

முயற்சியுடைய மனமுடையவனாயிருக்கையாகிற உத்ஸாஹம் ஆகியவற்றோடு கூடிய வனாய் சேர்ந்து வரும் பேறு இழவில் வேறுபடாப் பீடுடைய

கர்மத்தையொட்டிவரும் பயன் கிடைப்பதிலும் கிடைக்காமல் போவதிலும் விகாரமற்றிருக்கும் பெருமையுடைய

கர்த்தா

செயல் புரிபவன்

மிக்கு வீறு இயலும் சத்துவத்தான் ஆம்

மிகவும் பெருமை பெற்ற ஸாத்விக கர்த்தா ஆகிறான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top