பகவத் கீதை வெண்பா துக்கத் தொடர்ச்சி பொருணாசஞ் சூழ் பீடை யொக்க வியல்வலிதா னொன்றினையுங் – தக்கறியான் மோகத்தாற் செய்கரும முண்டேற் கடைக்குணத்தின் வேகத்தா லாகுமே மிக்கு. 18.25 துக்கத்தொடர்ச்சி தொடர்ந்துவரும்துன்பம் பொருள் நாசம் பொருளழிவு சூழ் பீடை (தனக்கும் பிற உயிர்களுக்கும்) உண்டாகும் ஹிம்ஸை ஒக்க இயல் வலி தான் (தன்னுடைய) செயல் முடிக்கும் திறன் ஒன்றினையும் ஆகிய எதையும் தக்கறியான் நன்கு அறியாமல் மோகத்தால் (பரமபுருஷன் செய்விக்கிறான் என்னும்) அறிவில்லாமல் செய்கருமம் உண்டேல் செய்யப்படும் கர்மம் இருந்ததானால் (அது) கடைக்குணத்தின் வேகத்தால் மிக்கு ஆகுமே மூன்றாவது குணமான தமோ குணத்தின் வேகத்தால் மிகவும் உண்டாகும் தாமஸ கர்மம் ஆகும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0