பகவத் கீதை வெண்பா

காமநசை தன்ன லகங்காரக் காழ்ப்பினிற்
றாமருவு மாயாசந் தான்மிக்குச் – சேமமென
நின்றியலு மக்கரும நேர்ந்தே யிடைக்குணத்திற்
சென்றியலு மென்றுரைப்பர் தேர்ந்து.         18.24

காமநசைதன்னால்

பலனில் விருப்பத்தாலும்

அகங்காரக் காழ்ப்பினில்

'நான் செய்பவன்' என்னும் அபிமாநத்தோடும்

தாம் மருவும் ஆயாசம் தான் மிக்கு

தாம் செய்யும் பெருமுயற்சியோடு

சேமம் என நின்று இயலும்

தனக்கு நன்மையளிப்பது என்னும் எண்ணத்துடன் உறுதியாகச் செய்யப்படும்

அக்கருமம்

அந்தக்கர்மம்

இடைக்குணத்தில் நேர்ந்தே சென்று இயலும்

நடுக்குணமாகிற ரஜோகுணத்தால் உண்டானதாகச் செயல்படும்

என்று தேர்ந்து உரைப்பர்

என்று (அறிவாளிகள்) ஆராய்ந்துக் கூறுவர்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top